search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்த்தி சுரேஷ்"

    • கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார்.
    • திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தேர்தல் எப்போது ஒரே மாதிரி இருப்பதில், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால் நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதுவரை பிஜேபி கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பிஜேபி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பத்து முறை கீழே விழுந்த பிஜேபி இந்த முறை கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரகுதாத்தா'.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.


    சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று குறிப்பிட்டிருந்தது.


    இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’.
    • ஹோம்பலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.


    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.


    மேலும், கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடரி, ரெமோ, மாமன்னன் என பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.



    நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்டுக்காக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் நடிகையர் திலகம். இந்த படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.

    சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    இப்படி பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தெறி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.


    தெறி

    இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 'கீ' படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
    • கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர், இன்று தனது பிறந்தநாள் உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். லவ் யூ தலைவி என்று பதிவிட்டு வாழ்த்து வேண்டி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, "லவ் யூ டூ" என்று பதிவிட்டுள்ளார்.



    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, மாமன்னன் ஒரு அரசியல் படம். நான் இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். இந்தப் படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். தற்சமயம் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் எனக்கு வருகிறது.


    அடுத்த படம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். பிரபல டைரக்டர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை. உதயநிதி நல்ல ஜாலியான மனிதர். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கலகலவென்று சிரித்த முகமாகவே இருப்பார். படப்பிடிப்பே ஜாலி பயணமாகவே இருந்தது. நல்ல விஷயங்களை இந்த படத்தில் கூறியுள்ளோம். என்று பேசினார்.

    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் நடித்துள்ளனர்.

    'கண்ணை நம்பாதே' தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சிகப்பு நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். 

    கீர்த்தி சுரேஷ் பதிவு
    கீர்த்தி சுரேஷ் அறிக்கை

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது, 'சாணி காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன்” என்று பதிவிட்டு ‘சாணி காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  


    ×